
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டு பிள்ளைகள் யாருடைய அரவணைப்பும் இல்லாமல் சுற்றி திரிந்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 வயதுடைய ராகவி மூன்று வயதுடைய முகேஷ் ஆகிய இருவரையும் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
பின்னர் விசாரணையில் அவர்கள் ஏரியூரில் வசிக்கும் சேட்டு-நந்தினி தம்பதியினரின் பிள்ளைகள் என்பது உறுதியானது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நந்தினி மருத்துவமனையில் பிள்ளைகளை தனியாக தவிக்க விட்டு சென்றுள்ளார். இது குறித்து நந்தினியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகளின் மாமா பாலாஜி சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளை பத்திரமாக அழைத்து சென்றார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.