அமைச்சர் முத்துசாமி  தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு திமுகவை பார்த்து பயம் என்று கூறியுள்ளார். அதாவது அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது விஜய் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று இறுமாப்புடன் கூறுகிறார்கள். நான் அவர்களை எச்சரிக்கிறேன். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக அவர்களின் கூட்டணி உடையும். மக்களே அவர்களை மைனஸ் ஆக்குவார்கள். மக்களோடு சேர்ந்து நான் அவர்களை எச்சரிக்கிறேன் என்றார். விஜய் தொடர்ந்து திமுகவை சரமாரியாக ‌ விமர்சிக்கும் நிலையில் பாஜகவையும் விமர்சிக்கிறார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் முத்துசாமி இது தொடர்பாக பேசினார். அவர் கூறியதாவது, விஜய் திமுக ஆட்சியை பார்த்து பயப்படுகிறார். தற்போது அம்பேத்கர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக திமுக ஆட்சியை பார்த்து பெருமைப்படுவார். தமிழகத்தில் திமுகவை விமர்சித்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்பதால் சிலர் அதை செய்கிறார்கள். திமுகவை குறை கூறுகிறார்கள். யாரைப் பார்த்தும் திமுக பயப்படாது என்று கூறினார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திமுக மீண்டும் ஆட்சியில் அமரும் என்று கூறினார்.