
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கமன்பூர் அடுத்த குண்டாராம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி சொர்ணலதா (38) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சொர்ணலதா தொலைதூரக் கல்வி மூலம் பட்டப்படிப்பு படித்த நிலையில் லட்சுமணனை அதற்குள் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய மூத்த மகன் ரோஷன் ஐஐடி முடித்த நிலையில் ப்ரோக்ராம் அசிஸ்டன்ட் படித்து வருகிறார். இந்நிலையில் சொர்ணலதா கம்ப்யூட்டர் சம்பந்தமான படிப்பை படிக்க விரும்பிய நிலையில் தன் மகன் படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்து அவரும் படித்து வருகிறார். மேலும் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தன் மகனை ஊக்கப்படுத்துவதற்காக தான் அவன் படிக்கும் கல்லூரியில் படித்து வருவதாக சொர்ணலதா கூறியுள்ளார்.