உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைக்கு சென்றார். அதாவது ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அந்த அபராதத்தை செலுத்த தவறினால் சிறை தண்டனையை சந்திக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வாலிபர் அபராத தொகையை செலுத்த தவறிய நிலையில் தண்டனையை ஏற்றுக் கொண்டார்.

அந்த நபருக்கு கிட்டத்தட்ட 9 மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் தற்போது அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த மகிழ்ச்சியில் பிரேக் டான்ஸ் ஆடினார். அதாவது உடலை வளைத்து நெளித்து அவர் நடனமாடிய நிலையில் அதனை காவல்துறையினரும் வழக்கறிஞர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.