திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அத்திமாஞ்சேரி பேட்டை சுந்தரேச நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சேகர் என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதனை கேட்டு கோபமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்து அந்த ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது