மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கௌகன்ச் மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 16 வயது சிறுமி ஒருவரை ஆம்புலன்சில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதாவது இருவர் ஓடும் ஆம்புலன்ஸில் வைத்தே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு நடுரோட்டில் தூக்கி வீசிவிட்டனர். இது தொடர்பாக சிறுமி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரேந்திர சதுர்வேதி, அவருடைய நண்பர் ராஜேஷ் கேடவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஓடும் ஆம்புலன்சில் சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.