கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒருவர் சாலையில் செல்லும்போது லேப்டாப்பை பார்த்தபடி அலுவலகத்தில் நடைபெறும் மீட்டிங்கில் கலந்து கொள்ள அவசரமாக சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒரு பயனர் தன்னுடைய x பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் பெங்களூருவின் உச்சகட்ட தருணம். பரபரப்பான நகர வாழ்க்கைக்கு மத்தியில் தன்னுடைய பணியையும் தடையின்றி செய்யும் ஒருவர் என்று பதிவிட்டுள்ளார். இது ஒரு உச்சகட்ட முட்டாள்தனமான செயல் என்றும் மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.