இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் ஒரு பயங்கர விபத்தில் சிக்கினார். இந்த விபத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. இந்த சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் உயிருக்கு போராடியபோது ரஜத் குமார் மற்றும் நிஷத் குமார் ஆகிய இருவர் தான் ரிஷப் உயிரை காப்பாற்றினர். அவர்கள் தக்க சமயத்தில் உயிரை காப்பாற்றினர். ஏனெனில் அவர்கள் காப்பாற்றிய அடுத்த நொடியே கார் பிடித்து எரிய ஆரம்பித்தது. அவர்கள் இருவரும் ரிஷப் யார் என்று தெரியாமல் உதவி செய்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய ரிஷப் பரிபூரணமாக குணமடைந்து மீண்டும் இந்திய அணியில் விளையாடி வரும் நிலையில் தற்போது தன்னை காப்பாற்றிய இருவருக்கும் பைக் பரிசாக கொடுத்துள்ளார். அவர்கள் இருவருக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை பரிசாக ரிஷப் வழங்கியுள்ளார். அந்த வாலிபர்கள் இருவரும் ரிஷப் யார் என்று தெரியாமல் தான் உயிரை காப்பாற்றியுள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருவரும் வேலை பார்த்து வருகிறார்கள். மேலும் ரிஷப் கொடுத்த பரிசை வாழ்க்கையில் இரு வாலிபர்களும் மறக்க மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.
