தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் சீமான் கட்சி தொடங்கிய விஜய்க்கு முதலில் ஆதரவு கொடுத்த நிலையில் அவருடைய முதல் மாநாட்டுக்கு பிறகு விமர்சிக்க தொடங்கிவிட்டார். பல அரசியல் கட்சி தலைவர்களும் சீமானின் வாக்கு வங்கி விஜய்க்கு சென்று விடும் என்பதால் சீமான் பயத்தில் இப்படி விஜயை விமர்சிக்கிறார் என்கிறார்கள். சீமான் மற்றும் அவருடைய கட்சியின் பிரமுகரான சாட்டை துரைமுருகன் ஆகியோர் விஜயை தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்கள். நடிகர் விஜய் மீது அவர்கள் இப்படி விமர்சனங்களை செய்யும் நிலையில் தற்போது பொதுமக்கள் சிலரிடம் ஒரு பேட்டி எடுத்துள்ளனர்.

அந்த பேட்டியில் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்டபோது அவர்கள் அனைவரும் விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம் என்று கூறுகிறார்கள். அதாவது போன தேர்தல் வரை நாங்கள் சீமானுக்கு தான் ஓட்டு போட்டோம். ஆனால் இனி சீமானுக்கு ஓட்டு போட மாட்டோம். புதிதாக ஒருவர் வந்துள்ளதால் அவருக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் விஜய்க்கு ஓட்டு போடுவோம் என்று கூறுகிறார்கள். ஒரு ரசிகை விஜய் சிறுவயதே முதலே எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் என்பதால் கண்டிப்பாக அவருக்கு தான் ஓட்டு போடுவேன் சீமானுக்கு ஓட்டு போடவே மாட்டேன் என்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.