
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் உள்ள அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகரிலுள்ள பெரும்பாலான நியாய விலை கடைகளில் துவரம் பருப்பு மக்களுக்கு வழங்கவில்லை என்றும் மக்களுக்கு உடனடியாக துவரம் பருப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். இதற்கு தற்போது அமைச்சர் சக்கரபாணி விளக்கம் கொடுத்த அருகை வெளியிட்டுள்ளார்.
அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் துவரம்பருப்பு தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் அளவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் போதுமான அளவு அனுப்பப்பட்டதோடு எங்கும் தட்டுப்பாடு கிடையாது. தமிழகம் முழுவதும் 2.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ துவரம் பருப்பு மாதம் தோறும் ரூபாய் 30 விலையில் கிடைக்கிறது. இதே போன்று ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாயில் கிடைக்கிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவைகள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு கிடைக்கும் வகையில் சரியான விவரங்களை தெரிந்து கொண்டு ராமதாஸ் அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.