பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு பதிவு செய்வதற்கான கால வரம்பு தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 15 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து அறிவித்துள்ளது.

அதாவது பலர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்காததால் விவசாயிகள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அதனை அரசு ஏற்று கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் கூட எழுதி இருந்தார். மேலும் அதன்படி வருகிற 30-ஆம் தேதி வரை தற்போது பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்ய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.