
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 20-ஆம் தேதி நடைபெறும் நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே மகாராஷ்டிராவில் பிரச்சாரம் மேற்கொண்ட போது உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்தார். அதாவது நீங்கள் ஒரு உண்மையான யோகியாக இருக்க விரும்பினால் கெருவா அணிந்து கொண்டு அரசியலில் இருந்து விலகியிருங்கள் என்று கூறினார். இதற்கு யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத் இது பற்றி கூறும்போது, நான் ஒரு யோகி என்பதால் என்னை பொறுத்தவரை தேசம் மட்டும் தான் முதன்மையானது.
ஆனால் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு சமாதான அரசியல் தான் முதன்மையானது. நீங்கள் ஹைதராபாத் நிஜாம் இதுதான் கோபப்பட வேண்டுமென்றால் கோபத்தை காட்ட வேண்டும். ஹைதராபாத் நிஜாமின் ரசாக்கள் உங்கள் கிராமத்தை எரித்தார்கள். இந்துக்களை அவர்கள் கொலை செய்தார்கள். உங்களின் தாய், சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அவர்கள்தான் எரித்தார்கள். இந்த உண்மையை நீங்கள் நாட்டு மக்களிடம் கூறுங்கள் என்றார். மேலும் சுதந்திரத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் நிஜாம் ஆட்சி நடைபெற்று வந்ததால் அவர்கள் இந்தியாவுடன் இணைய மறுத்தனர். அப்போது அவரின் ரசாக்கள் படையினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த சமயத்தில் கார்கேவின் சொந்த கிராமமான ஹைதராபாத்தில் உள்ள பிடார் என்ற கிராமம் நிஜாம் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.