அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எதிர்கட்சி தலைவராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். தற்போது ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்று கூட நினைக்காமல் முதல்வர் தன்னுடைய பதவியை மறந்து நிலையை மறந்து விமர்சனம் செய்கிறார். ஒரு கை எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து ஊர்ந்து சென்றார், கரப்பான் பூச்சி, பறந்து சென்றார் என்றெல்லாம் முதல்வர் தன் பதவியை மறந்து விமர்சிக்கிறார்.

அதிமுகவினர் யாரையும் தவறாக விமர்சிக்கவில்லை. அதேநேரம் ஆட்சியில் இருப்பவர்கள் விமர்சித்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறினார். மேலும் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பதற்கு விமர்சித்திருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை போன்று கரப்பான் பூச்சியை போன்று ஊர்ந்து சென்று பதவி வாங்கியவர் கிடையாது, திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைக்காமல் உங்கள் பெயரை வைக்கட்டுமா என்று கூறியிருந்தது நிலையில் தற்போது அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.