
நவம்பர் 1ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்கும் முறையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களை மலிவு விலையில் வழங்கி வருகிறது. இதுவரை 3 கிலோ அரிசியுடன் 2 கிலோ கோதுமை வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய விதிமுறையின் கீழ் இரண்டையும் சமமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, இனி ரேஷன் கார்டில் 2.5 கிலோ அரிசியுடன் 2.5 கிலோ கோதுமையும் வழங்கப்படும்.
அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் தானியங்களில் மாற்றம் செய்யப்பட்டு 18 கிலோ அரிசியுடன் 17 கிலோ கோதுமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இ-கேஒய்சியை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி முதலில் செப்டம்பர் 1 என நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் சில காரணங்களால் காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு திட்டம் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதால், பொதுமக்கள் இந்த புதிய விதிமுறைகளை அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.