தமிழகம் முழுவதும் தற்போது நிர்வாகிகளுக்கு விஜய் ஒரு அதிரடியான உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழல்கள் குறித்து பட்டியல் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த ஊழல்கள் குறித்து முழு விவரங்களை திரட்டி தனக்கு அனுப்புமாறு கூறிய அவர் ஆதாரங்கள் மிகவும் முக்கியம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக பினாமிகளின் விபரங்களையும் சேகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன் பிறகு ஊழல் பட்டியல் குறித்து அனுப்பும் போது ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சாட்டினால் வழக்குகளை சந்திக்க நேரிடும் என்பதால் உரிய ஆதாரத்துடன் அதனை அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த ஊழல் பட்டியலை சேகரித்து அதனை ஆளுநரிடம் முறையாக மனுவாக கொடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே திமுக வை குடும்ப ஆட்சி செய்யும் அரசு என்றும் அவர்கள் தான் தங்களுடைய முதல் எதிரி என்றும் விஜய் அறிவித்த நிலையில் தற்போது ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல் பட்டியலை தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.