நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சில திட்டங்களை திமுக தற்போது முடித்து வைக்கும் நிலையில் அதற்கு கலைஞர் பெயரை சூட்டுகிறார்கள். வங்கதேசத்தில் அந்த நாட்டு தந்தையின் சிலைகளே உடைக்கப்பட்டது. ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி சிலைகளுக்கு ஏற்பட்ட அதே நிலைதான் உங்களுக்கும் ஏற்படும். அதிகாரம் என்பது கண்டிப்பாக யாருக்கும் நிலையானது கிடையாது.

அதன் பிறகு தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் இரண்டும் ஒன்று என்று சொல்வது முதலில் தவறு. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கொலைகாரனும் கொலை செய்யப்பட்டவனும் ஒன்று என்பது போல் இருக்கிறது. அது எப்படி இருவரும் ஒரே ஆளாக இருக்க முடியும். கடற்கரையை காப்பது தான் தமிழ் தேசியம். ஆனால் திராவிடம் என்பதோ கடற்கரையை கல்லறையாக மாற்றிவிடும். மேலும் தமிழ் தேசியம் ஆட்சிக்கு வரும்போது கல்லறையை இடிக்கும் என்று கூறினார்.