மத்திய அரசு, நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கத்தில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வரும் மாதம் 31ஆம் தேதிக்குள் அனைத்து பான் கார்டு வைத்திருப்பவர்களும் தங்களுடைய ஆதார் அட்டையுடன் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த காலக்கெடுவை மீறினால், பான் கார்டு செயலிழந்து, அதன் மூலம் வரும் நிதி பரிவர்த்தனைகளிலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

இதற்கிடையில், சில ஃபின்டெக் நிறுவனங்கள் அனுமதியின்றி வாடிக்கையாளர்களின் பான் கார்டு விவரங்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியானது. இதைத் தடுக்க, பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பான் கார்டு இன்றைய நிதி பரிவர்த்தனைகளுக்கு முக்கிய ஆவணமாக இருப்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிகமானோர் ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பித்து பெற்று வருகின்றனர்.

அதேபோல், அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் வருமான வரித் துறைக்கான பயன்பாடுகள் பான் கார்டு இல்லாமல் செய்ய முடியாது என்பதால், மக்களும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக ஆதாருடன் இணைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.