மும்பை வான் ஹடே மைதானத்தில்  நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது. இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து  அணி முழுவதுமாக தோற்கடித்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி பயிற்சியாளர் கம்பீரின் பயிற்சியை குறித்து கேள்வி எழுப்புகிறது.

கம்பீருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த பயிற்சியாளருக்கும் கொடுக்காத முன்னுரிமையை கொடுத்த போதும் இவ்வாறு நடந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. ஆஸ்திரேலியா தொடருக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் போட்டியாளர்களை தேர்வு செய்வதற்கு நேரடியாக கம்பீற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன் பேரில் அவர் சில வீரர்களை பரிந்துரை செய்தார்.

தற்பொழுது இந்தியா மிக மோசமான நிலையில் தோல்வி அடைந்ததன் காரணமாக கம்பீருக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமையை குறைக்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிடுகிறது என தகவல்கள் வெளியாகின்றன. அடுத்து வரும் ஆஸ்திரேலியாவிற்கான டெஸ்ட் தொடரில் பயிற்சியாளர் கம்பீர் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி உலக சாம்பியன்ஷிப்புக்கு செல்லும் இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.