
திருச்சி சூர்யா தற்போது மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனதில் சீமான் குறித்து 15 ஆடியோக்களை வெளியிட்டதால் பழிவாங்கும் நோக்கத்தில் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் தன்மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனு நாளை மறுநாள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.