பெரு‌ நாட்டில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென வானிலை மாறிய நிலையில் புயல் தீவிரமடைந்தது. இதன் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. கால்பந்தாட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் வீரர்கள் மைதானத்தில் இருந்து சென்ற நிலையில் திடீரென பயங்கரமாக மின்னல் தாக்கியது.

இதில் அடுத்தடுத்து சில வீரர்கள் சுருண்டு கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ஜோஸ் ஹூகோ டி லா குரூஸ் மெசா (39) என்ற வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அதன் பிறகு சில வீரர்களுக்கு தீக்காயங்களில் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.