சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்த கூட்டத்தின் போது தற்போது 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம். ஜாதி வாரி கணக்கெடுப்பு பணிகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு மத்திய அரசை காரணம் காட்டும் திமுகவுக்கு கண்டனம். நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு கல்வியை மாநில பட்டியலுக்கு வழங்க வேண்டும். மின்சார கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கீடு செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்த நிலையில் இதுவரை அதனை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம்.

கால நிர்ணயம் செய்து மது கடைகளை மூட நடவடிக்கை எடுப்பது குறித்த தீர்மானம். ஆளுநர் மீதான நிலைப்பாடு, காமராஜர் மாதிரி பள்ளிகள், மாநில தன்னாட்சி, தமிழ்நாட்டில்‌ மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதற்கு கண்டனம், திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர், தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்றனர். தமிழ் சார்ந்த மொழி விஷயங்களில் தலையிட ஒன்றிய அரசுக்கு உரிமை கிடையாது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இஸ்லாமிய உரிமைகளை பறிப்பதாக இந்த சட்டம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவதால் இதனை உடனடியாக திரும்பப் பெற தீர்மானம். தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் தகைசால் தமிழர் விருதை வரவேற்று தீர்மானம் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.