தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்ற முடிந்தது மாநாட்டில் விஜய் அவர்கள் தனது அரசியல் எதிரியாக திமுக கட்சியை மறைமுகமாக முன்னிறுத்தினார். இதை தொடர்ந்து திமுகவினரும் அதற்கு மறு பதில் அளிக்கும் விதமாக விஜய் இப்போது வந்தவர். ஆனால் இதற்கு முன்பாக காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சீமான், கமல் உள்ளிட்ட பல பேரிடம் திமுக மோதி விட்டது. யாராலும் திமுகவை அசைக்க முடியாது. எம்ஜிஆரை விட விஜய் பெரிய நடிகராக இருக்க முடியுமா அவரை விட செல்வாக்கு அதிகம் இருக்கும் நடிகரா விஜய் எம்ஜிஆரை  பார்த்தவங்க நாங்க என்ற பாணிகள் திமுக தமிழக வெற்றி கழகத்திற்கு பதிலடி கொடுத்து வர அதன் ஆதரவாளர்கள் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

அதில் எம்ஜிஆரை பார்த்தவர்கள் நாங்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் திமுகவை உடைத்ததை வேடிக்கை பார்த்தார்கள். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்ததை வேடிக்கை பார்த்தார்கள். எம்ஜிஆர் வெற்றி பெற்றதை வேடிக்கை பார்த்தார்கள் 13 வருடம் சாகும் வரை தோல்வியே அடையாமல் ஆட்சி செய்ததை வேடிக்கை பார்த்தார்கள் எம்ஜிஆர் இருக்கும் வரை வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள். இதைத்தான் எம்ஜிஆரை பார்த்தவர்கள் நாங்கள் என அவர்கள் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை திமுக அவரை ஒருமுறை கூட தோற்கடித்ததில்லை. அதே போல தான் விஜய் அவர்களும் 2026 இல் வெற்றி பெறுவார். விஜய் அவர்கள் இருக்கும் வரை அவர் மட்டுமே முதல்வர் மீண்டும் அதற்கு தயாராகிக் கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.