தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல் மாநாட்டின் போது திராவிட மாடல்ன்னு சொல்லி மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஒரு கூட்டம் மக்களை ஏமாற்றி வருவதாக கூறினார். அதோடு குடும்ப அரசியல் செய்யும் அந்த கட்சிதான் எங்களுடைய முதல் எதிரி என்றும் அவர் அறிவித்தார். ஆனால் அதே சமயத்தில் அதிமுகவை பற்றி விஜய் விமர்சிக்காததோடு கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவரிடம் பத்திரிக்கையாளர்கள் திமுகவை முதல் எதிரி என்று விஜய் அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி ஸ்டாலின் இந்த கேள்விக்கு ஏற்கனவே திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பதிலளித்துவிட்டார். எனவே மேற்கொண்டு நான் இதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டு காரில் ஏறி அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். மேலும் முன்னதாக திமுகவை அரசியல் எதிரி என்று விஜய் விமர்சித்ததற்கு கண்டிப்பாக அவர் பதில் சொல்ல வேண்டும் என்று ஆர் எஸ் பாரதி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.