
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய் திமுகவின் நேரடியாக தாக்கி பேசிய நிலையில் அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதன்பிறகு கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் நடிகர் விஜயின் முதல் மாநாடு பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும் நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய கட்சி கொள்கைகள் பற்றி பேசி உள்ளார். அதில் போய் நாம் சரியா அல்லது தவறா என்று கருத்து கூற முடியாது என்றார். அதன்பிறகு தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருப்பதால் கூட்டணி குறித்த அறிவிப்பு பின்னர் முறையாக அறிவிக்கப்படும். நடிகர் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்றால் அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதிமுக சிறப்பாக செயல்படுவதால் தான் விஜய் அதிமுக கட்சியை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை என்று கூறினார்.