தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 31ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் அவர்கள் செல்வதற்கு வசதியாக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதேபோன்று சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்த நிலையில் அதனை அரசு ஏற்று வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை ஆனது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நாளை காலை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்றும் மதியத்துக்கு மேல் பள்ளிகள் இயங்காது என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் இதனால் தற்போது மொத்தம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 5 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரியிலும் தீபாவளி பண்டிகைக்கு முதல்வர் ரங்கசாமி 5 நாட்கள் விடுமுறை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.