தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் விஜய் அவர்கள் தனது எழுச்சிமிகு உரையை ஆற்றினார் அரசியல் சார்ந்த பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். தனது கட்சியின் கொள்கையை பிரகடனம் செய்தார். இருப்பினும் விஜய் அவர்களின் மேடைப்பேச்சு என்றாலே ஒன்றே ஒன்று தான் ஞாபகம் வரும். அது அவரது குட்டிக்கதை தனது படத்திற்கான இசை வெளியீட்டு விழாக்களில் தொடர்ந்து அவர் குட்டி கதை சொல்வது வழக்கம். அதேபோல இந்த அரசியல் மாநாட்டிலும் அவர் குட்டி கதை ஒன்றை சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் ஒரு குட்டி கதை ஒன்றும் கூறியிருந்தார். அதில் பச்சிளம் குழந்தைக்கு பயம் என்பது தெரியாது அதற்கு முன்பாக பாம்பு ஒன்று படமெடுத்து நின்றால் கூட தனது தாயைப் பார்த்து எப்படி கள்ளம் கபடம் அற்ற சிரிப்பை சிரிக்குமோ அதே சிரிப்பை அந்த பாம்பை பார்த்தும் சிரிக்கும் ஏனென்றால் பாசம் என்றால் என்னவென்றே தெரியாத அந்த பச்சிளம் குழந்தைக்கு பயம் என்னவென்று தெரியப்போகிறதா பயப்படாமல் பாம்பை பிடித்து விளையாடும். அந்தப் பாம்பு தான் அரசியல். பயத்தோடு அணுகினால் சிக்கல்தான்.

பயமில்லாமல் அதை கையில் எடுத்து விளையாட வேண்டும் என்பது போல் பேசி இருப்பார். இவர் சொன்ன அதே குட்டிக்கதை நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. தவழ்கின்ற ஒரு வயது குழந்தை தன் முன் படம் எடுத்து நிற்கும் பாம்பை கண்டு துளி அளவு பயப்படாமல் அதனுடன் விளையாட முயல்கிறது.

பாம்பு குழந்தையை  பலமுறை தாக்குவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் கொஞ்சம் கூட பயப்படாமல் அந்த குழந்தை மீண்டும் மீண்டும் பாம்பை தனது கைகளால் பிடிக்க முயல்கிறது. விஜய் அவர்களின் குட்டிக்கதை நிஜ வாழ்க்கையில் உண்மையாக நடந்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

View this post on Instagram

 

A post shared by Yuvaraj (@yuviyavaraj959)