
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் கூட்டணி குறித்து வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அதன்படி மாற்று சக்தி என்று சொல்லிக்கொண்டு நான் அரசியலுக்கு வரவில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு கண்கள். நம்முடன் வர பயணிப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்.
கூட்டணி வருபவர்களுக்கு கண்டிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு. மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றால் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு உண்டு என்று விஜய் அதிரடியாக அறிவித்த கூட்டணிக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.