
மத்திய அரசின் உத்தியோகினி திட்டம் பெண்களுக்கு தொழில் தொடங்கும் வாய்ப்பை உருவாக்கி அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களுள் ஒன்றான இதன் கீழ், பெண்கள் தங்களுடைய சொந்த தொழிலை துவங்கி, அதன் வளர்ச்சியை மேம்படுத்தவும் வட்டி இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும்.
குறிப்பாக, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு மானியமாக ரூ.1.5 லட்சம் வழங்கப்படும், மற்றும் இதர பிரிவினருக்கு 30% வரை மானியம் வழங்கப்படும். திட்டத்தின் மூலம் தற்போது வரை 47 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். 18 முதல் 55 வயதுக்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்கும் பெண்கள் இந்த வாய்ப்பினைப் பெறலாம்.
தொழில் துவங்க விரும்பும் பெண்கள் வங்கி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மளிகை கடைகள், தேயிலை தூள் தயாரிப்பு, மற்றும் தையல் போன்ற சிறு தொழில்களில் சுயதொழில் தொடங்கவும், அதை விரிவாக்கவும் இந்த கடன் உதவியாக இருக்கும். தொழிலின் விவரங்களுடன் ஆதார் அட்டை, புகைப்படங்கள் மற்றும் வருமானச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
முன்பு கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது திட்டத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளது.