“K” என்ற சொல் அதிக அளவில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இணையதளத்தில் பின்பற்றுபவர்களின்  எண்ணிக்கையை  10k, 100k என குறிப்பிடுவதுண்டு. இதேபோன்று பணத்தையும் k என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதில் 10k என்பது ஆயிரம் எனவும், 100k என்பது ஒரு லட்சம் ஆகும். இது குறிப்பிடுவதற்கு சுருக்கமாக இருப்பதால் பயன்படுத்தப்படுகிறது. இருந்த போதிலும் “k” என்ற சொல்லின் பின்னால் அர்த்தம் உள்ளது.

கிரேக்கத்தில் k என்பது கிலோய் என குறிப்பிடப்படுகிறது. khil-ee-oy என்ன உச்சரிப்பு இருப்பதால் இதில் உள்ள k பயன்படுத்தப்படுகிறது. கிரேக்க சொல்லான கிலோய் என்பதற்கு ஆயிரம் என்று பொருள். பிரெஞ்சுகாரர்கள் கிலோய் என்பதை கிலோ என மாற்றிவிட்டனர். இதனால்தான் கணித முறைப்படி மெட்ரிக் அளவைகளில் 1 கிலோ கிராம் (1000 கிராம்),1 கிலோமீட்டர் (1000 மீட்டர்) என குறிப்பிடப்படுகிறது.