
பிரதமர் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்பும் இப்படிப்பட்ட செய்திகள் பரவிய நிலையில் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால் தற்போது மீண்டும் மத்திய அரசாங்கம் இளைஞர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் பரவுகிறது.

அதனுடன் ஒரு லிங்க் இணைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து பதிவு செய்தால் இலவச லேப்டாப் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த நிலையில் மத்திய அரசாங்கம் இப்படி எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என மத்திய அரசின் Fact Check தளம் கூறியுள்ளது. மேலும் இதன் காரணமாக தேவையில்லாமல் இது போன்ற போலி செய்திகளில் வரும் லிங்கை கிளிக் செய்து மக்கள் யாரும் பணத்தை இழக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.