தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக அமுதம் பல் பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிகள் சுயசேவை முறையில் இயங்கும் நிலையில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் செயல்படுகிறது. இதன் மூலம் பருப்பு உள்ளிட்ட தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகை தொகுப்பு குறித்த விற்பனை நடைபெற உள்ளது.

அதன்படி சுமார் 3.8 கிலோ இடையில் 15 மளிகை பொருட்கள் ரூ‌.499 விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் இந்த தகவலை அமைச்சர் சக்கரபாண்டி தெரிவித்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கு தடையின்றி அமுதம் பரிசுத்தொகுப்பு அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என்றும் இதனை நியாய விலை கடைகளில் பிரச்சனை இன்றி பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.