
ஒடிசா மாநிலம் பௌத் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாரிச்சக் கிராமத்தைச் சேர்ந்த சுகந்த் கன்ஹர் மற்றும் அவரது 12 வயது மகள் லிபிகா, வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளனர். இந்த துயரமான சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இருவரையும் உடனடியாக அருகிலுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தார். இந்த மரணம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுகந்த் கன்ஹர் சாரிச்சக் கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்திற்கு இழப்பினை ஏற்படுத்தியுள்ளது.