
தமிழகத்தில் திமுக மற்றும் சிபிஎம் கூட்டணியில் இருக்கும் நிலையில் தற்போது கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் 3000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் சேர்ந்து இலவச பட்டா கோரி தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எம்பி சு. வெங்கடேசனை கண்டித்து கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிபிஎம் மற்றும் திமுக கூட்டணி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்பி சு. வெங்கடேசனிடம் கேட்டபோது என் மீது உள்ள கோபத்தால் சிலர் இப்படி போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறினார். மேலும் இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.