
திருவண்ணாமலையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, திருவண்ணாமலையில் சர்வதேச அளவிலான ஹாக்கி ஸ்டேடியம் அமைத்து தர வேண்டும் என பல கோரிக்கைகள் வந்துள்ளது. சென்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திருவண்ணாமலையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி ஸ்டேடியம் அமைக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டோம்.
அதற்காக முதலமைச்சர் 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளார். விரைவில் அந்த பணி தொடங்கி சரியாக ஒரு ஆண்டுக்குள் திருவண்ணாமலையில் மிகச் சிறந்த சர்வதேச அளவிலான ஹாக்கி ஸ்டேடியம் அமைய உள்ளது. உங்கள் வாழ்வில் உயரத்தை தொடர் திராவிட மாடல அரசு உங்களுக்கு துணை நிற்கும் என கூறியுள்ளார்.