திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காரணபேட்டை பகுதியில் 65 வயதுடைய மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்