இந்தியாவில்  நாளை தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதனால் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது நியூசிலாந்து அணி. இந்தத் தொடர் கிரிக்கெட்டில் இந்தியாவின் சார்பாக ரோகித் சர்மா தலைமையில் ஒரு அணியும், நியூசிலாந்து சார்பில் டாம் லதாம் தலைமையில் அணிகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியின் மூத்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கூறிய பதில்கள், ஒரு செய்தியாளர் கம்பீரிடம் விராட் கோலியின் பார்ம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு கம்பீர் கூறியதாவது, விராட் கோலி நீண்ட வருடங்களாக சிறப்பாக விளையாடி வருகிறார்.

அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர் ஆவார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி 2008 இல் நடைபெற்றது. அதில் அவர் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போது அவரோடு இணைந்து தொடக்க விளையாட்டு வீரராக களமிறங்கியது இன்றும் மனதை விட்டு நீங்காமல் நினைவில் இருக்கிறது. அப்போது பார்த்த விராட் கோலி இன்றும் வேட்கை தனியாமல் ஒவ்வொரு போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இதனால்தான் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பிளேயராக வலம் வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயமாக அதிக ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் வேகத்தில் இருப்பார்.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்களை டெஸ்ட் தொடரில் வீழ்த்துவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கிரிக்கெட்டை பொருத்தவரை ஏற்ற, இறக்கங்கள் இருக்க தான் செய்யும், இதை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிடக்கூடாது. அந்த செயல் நியாயமானது அல்ல. நாங்கள் அனைவரும் 8 தொடரில் தொடர்ந்து விளையாட உள்ளோம். விராட் கோலி ஓட சேர்ந்து அனைவரும் இந்த போட்டியில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆர்வத்தோடு உள்ளோம். இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.