பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி போரை விரிவுப்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராத போது இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஏவியது. அதனை தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் திட்டம் தீட்டி வருகின்றது. மேலும் ஈரானில் உள்ள அணுசக்தி மையங்களையும் எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் மத்திய கிழக்கில் இருக்கும் வளைகுடா அரபு நாடுகள் குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டும் நாடுகளுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் அரபு நாடுகள் தங்களின் வான்வளி மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.