வங்கதேசத்தில் மாணவர்களின் கலவரம் போராட்டமாக மாறிய நிலையில், தற்போது  இந்துகள் மீது தொடர்   தாக்குதல்கள்  நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.  இந்நிலையில். நவராத்திரி பண்டிகை  நடந்து வரும் நிலையில்,  இந்துகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள்  நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியான நிலையில் ,குறிப்பாக  துர்கா பூஜையின் போது 35 தாக்குதல்கள் வரை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்களில்  15 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் முக்கியமாக தலைநகர் டாக்காவில் தண்டி பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துர்கா தேவியின் சிலை அருகே வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி சார்பில் சந்திர நகரில் உள்ள ஜெஷோரேஸ்வரி காளியம்மனுக்கு வாங்கி வைக்கப்பட்ட விலை உயர்ந்த கிரீடம் திருடு போனது போன்ற தொடர் அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை வங்கதேசத்துக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதுபோன்ற தொடர் அசம்பாவிதங்கள் கவலை அளிக்கிறது,  அனைவரும் கொண்டாடக்கூடிய நவராத்திரி விழாவில் இது போன்ற தாக்குதல்கள் நடத்துவது தவறானது. அனைத்தும் கோயில்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வங்கதேசத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.