
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடி வெடித்து ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கோயில் திருவிழாவில் உபயோகப்படுத்தப்படும் நாட்டு வெடிகளை வீட்டில் வைத்து தயாரித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அது மட்டும் இல்லாமல் ஐந்து வீடுகள் சேதமானது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு வெடிக்காமல் கிடந்த நாட்டு வெடிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.