
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அஜித் குமாரின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூல்ஸ் நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் ஹார்லி டேவிட்சன் பைக் ஏற்பாடு செய்ததற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. அஜித் குமாருக்கு சினிமாவை தாண்டி துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். கடந்த ஆண்டு வீனஸ் மோட்டார்ஸ் என்ற டூர் நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலமாக பைக்கில் சுற்றுப்பயணம் செல்பவர்களுக்கு பல உதவிகள் வழங்கப்பட்டது.
இந்தியாவை தாண்டி போர்ச்சுக்கல், வியட்நாம், தாய்லாந்து, அரபிய நாடுகளான துபாய் ஓமன், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் பைக் பயணத்தை தேர்ந்து திட்டமிட்டு நடத்தியது. இதனால் அஜித்தின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூல்ஸ் நிறுவனம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சமீபத்தில் ஹார்லி டேவிட்சன் சென்னை மற்றும் ஹைதராபாத்துடன் இணைந்து அந்தமானில் ஒரு நிகழ்வை நடத்தியது. அதில் பலர் கலந்து கொண்டனர். அந்தமானில் நடத்தப்பட்ட சாதனைக்காக அஜித்துக்கும் அவரது நிறுவனத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.