வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்ற நிலையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆன இந்திய அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 127 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில் அடுத்ததாக இந்திய அணி களம் இறங்கியது.

இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39 ரன்கள் வரை குவித்தார். மேலும் இந்திய அணி  தொடக்கத்திலேயே அபாரமாக விளையாடி வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.