தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வாரங்கலில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி பி பார்மசி படித்துக் கொண்டிருக்கிறார். இந்த மாணவியின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். இவரது காதலை இளம்பெண் ஏற்க மறுத்ததால் நண்பர்களாக பழகலாம் என சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

இதனால் இளம்பெண் அவருடன் நட்பாக பழகியுள்ளார். இந்த நிலையில் மாணவியை எப்படியாவது அடைய வேண்டும் என முடிவு செய்த செல்வராஜ் குமார் தனது நண்பர்களான குச்சன்னா மனிதி, கொடம் விவேக் ஆகியோருடன் இணைந்து இளம்பெண்ணை லாஜிக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யலாம் என திட்டமிட்டனர். அதன்படி கல்லூரி விடுதிக்கு அருகே சென்ற செல்வராஜ்குமார் மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உன்னிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்துள்ளார்.

இளம்பெண் வந்தவுடன் காரில் வா எனக் கூறியுள்ளார். அந்தக் காரில் மூன்று பேர் இருந்ததால் மாணவி அவர்களுடன் செல்ல மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் சமாதானப்படுத்தி இளம்பெண்ணை அருகில் உள்ள லாட்ஜுக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளனர். பின்னர் சிவராஜ் உள்ளிட்ட மூன்று பேரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கதறி துடித்தார். அந்த வாலிபர்கள் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் ரயில் தண்டவாளத்தில் வீசி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறிய அழுதுள்ளார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவராஜ் குமார் உள்படம் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.