சமீபத்தில் வாட்ஸ் அப்பில் “BJP Free Recharge Yojana” என்ற தலைப்பில் 3 மாதங்களுக்கு இலவச செல்போன் ரீசார்ஜ் சலுகை வழங்கப்படுகிறது என்ற செய்தி வைரலாகி வருகிறது. இதில் பிரதமர் மோடி இந்த சலுகையை அறிவித்ததாகவும், அந்த சலுகையை பெற லிங்க்கை கிளிக் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி பெருமளவுக்கு பகிரப்பட்டு, பலராலும் நம்பப்பட்டுள்ளது.

ஆனால், மத்திய அரசின் ‘PIB Fact Check’ தளம் இதை முற்றிலும் போலியானது என உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு தவறான செய்தி. எனவே அந்த லிங்க்கை கிளிக் செய்து மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், ஆபத்தான தளங்கள் அல்லது மால்வேர்களைச் சந்திக்க நேரிடக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.