
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 111% அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிக அளவில் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த நிலைமையை முன்னிட்டு, இதர பகுதிகளில் இயல்புக்கு மாறாக அதிக மழை, வெள்ளம் போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.