நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்தை சரிசெய்ய மருத்துவமனைக்கு வந்தார்.

அவரின் நிலைமையை கவனித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை இல்லாமல் TRANSCATHETER முறையில் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இந்த சிகிச்சை முடிந்த பிறகு, அவர் நல்ல முறையில் சிகிச்சைக்கு பதிலளித்து வருகிறார்.

மருத்துவமனை நிர்வாகம், ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் என்றும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.