சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இன்று, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை, மேலும் 7 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்பதால் அவற்றுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.