
சுபத்ரா யோஜனா திட்டம், பாஜக ஆட்சியின் கீழ் ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்கான நிதி உதவியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு 5 ஆண்டுகளில் மொத்தமாக 50,000 ரூபாய் வழங்கப்படும். இதன் முதல் தவணையாக 5,000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை எடுக்க பெண்கள் ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிகளின் முன்பு கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளனர். இத்திட்டம் பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை உறுதிசெய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10,000 ரூபாய் தொகை கிடைக்கும் வகையில், இந்தத் திட்டம் பெண்களின் குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் உதவியாக அமையும். பெண்களின் அரசியல் ஆதரவை பெறவும் பாஜக இந்த திட்டத்தை முக்கியமாகக் கருதியுள்ளது.