
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் கண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரீஸ்வரி(12), சமீரா(7) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை கண்ணன் தனது மாமியார் ஆண்டாள்(67) மற்றும் இரண்டு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்றார் .இந்த நிலையில் தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை கண்ணன் முந்தி செல்ல முயன்றார்.
அப்போது லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கண்ணன் ,ஆண்டாள், மாரீஸ்வரி, சமீரா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.