பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் சோபி, பிரிட்டனில் ஒரு குடும்பத்தில் வீட்டு வேலைக்குச் சென்றிருந்தார். ஆனால், அங்கு அவருக்கு நேர்ந்த கொடுமைகள் அனைவரையும் உலுக்கியுள்ளன.

சோபியை வேலைக்கு அமர்த்திய சப்ரினா மற்றும் ஒய்ஸெம் என்ற தம்பதியினர், சோபி தனது முன்னாள் காதலனுடன் மந்திர சக்தி உதவியால் தொடர்பிலிருப்பதாகவும், வேவு பார்க்க வந்திருப்பதாகவும் குற்றம் சாட்டி அவரை கொடுமைப்படுத்தியுள்ளனர். சோபிக்கு சரியாக உணவு கொடுக்காமல் அடித்து, உதைத்து, பாலியல் வன்கொடுமை செய்து விடுவதாக மிரட்டி சித்திரவதை செய்துள்ளனர். கடைசியாக சோபியைக் கொன்று, தோட்டத்தில் வைத்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இந்த கொடூர செயலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும், சோபியின் பெற்றோருக்கு இழப்பை ஈடு செய்ய முடியாது. சோபியின் தாய் கேத்தரின், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகளை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறார். இந்த சம்பவம், வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.