தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு விதமான கடன் உதவிகள் அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது. அதாவது தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு அரசு கடன் உதவி செய்கிறது. அதன்படி ஒரு மாட்டுக்கு ரூ.60,000 வீதம் ரூ.1,20,000 வரை அரசால் கடன் உதவி வழங்கப்படுகிறது.

இந்த கடனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் 3 வருடங்கள் ஆகும். இந்த கடனுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.7 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் உதவியை பெறுவதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய் ஆக இருக்க வேண்டும். மேலும் இந்த கடன் உதவியை பெறுவதற்கு 18 வயது முதல் 60 வயது உடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.